free website hit counter

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கையர்கள் மீட்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 மீனவர்களுடன் இலங்கை மீன்பிடி இழுவை படகு மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீஷெல்ஸ் கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின் போது இலங்கை கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட இலங்கை இழுவை படகு சீஷெல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அரேபிய கடலில் 6 மீனவர்களுடன் இலங்கை மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் சனிக்கிழமை (ஜனவரி 27) கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பல நாள் படகு சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2024 ஜனவரி 12 ஆம் திகதி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: