2025 ஆம் ஆண்டு சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சாதாரண குடிமகனைப் பாதிக்காத வகையில் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த வரியின் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவதுடன், சாதாரண மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.