ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடுவெலவில் நெற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னகோன், "குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட புதிய குழுவொன்று இது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளது." என்றார்.
"நான் ஒவ்வொரு நாளும் குழுவுடன் தினசரி முன்னேற்றம் குறித்து விவாதித்து, அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக வெற்றிகரமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.
அண்மையில் இந்தியாவின் குஜராத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என ஏதேனும் செய்திகள் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், அது தொடர்பாக கவனமாக அறிக்கை செய்து, விஷயத்தைப் பற்றிய விவரங்களை வழங்க ஆணைக்குழுவை விசாரிக்குமாறு சிறிலங்கா காவல்துறையின் சட்டப் பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.