இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதிகரித்த வெளிநாட்டு நாணய வரவுகளுக்கு மத்தியில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி கணிசமான நிகர கொள்வனவுகளால் ஏப்ரல் மாத அதிகரிப்புக்கு ஆதரவளித்ததாக CBSL கூறுகிறது.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் சீனாவின் மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியும் அடங்கும், இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் ஒட்டுமொத்த பெறுமதி சுமார் 8.0 வீதமாக பதிவாகியுள்ளது.