free website hit counter

அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.

7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக விஞ்ஞானி வல்லுநர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை நிபுணர்கள் ஆகிய 05 தொழில்முறை சங்கங்கள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கையில் இணைந்துள்ளன.

இன்று(24) காலை 8 மணி முதல் நாளை(25) காலை 8 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

புற்றுநோய் நிலையங்கள், தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கிகள் என்பன இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: