முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் முயற்சியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு நான் முன்மொழிய விரும்புகின்றேன். புதிய அரசாங்கம் அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெறும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியும்” என்று முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.