ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக வாக்களித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நியமனம் செல்லுபடியாகாது என கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான அணியினர் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளரான சரத் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திஸாநாயக்க, இந்தச் சந்திப்புக்கு சட்டபூர்வமான தன்மை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்துக்காகப் போராடும் இரு பிரிவினருக்கும் இடையில் நிலவும் மோதலால் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டுள்ளது.