எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அரசாங்கம் தனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டு அரச வங்கிகளின் பிரதான கடன் பெற்ற 10 வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள் ஏன் மறைக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பிய எம்.பி பிரேமதாச, தனது கேள்விக்கு இன்றும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
"நாடாளுமன்றம் நாளை அல்லது நாளை மறுதினம் ஒத்திவைக்கப்படும் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நான் எழுப்பிய கிட்டத்தட்ட 11 கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது இதே கேள்விகளை நான் கேட்க வேண்டுமா?" என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.