கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த உட்பட மூவர் படுகாயங்களுடன் ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் போலிஸ் கான்ஸ்டபிள் ஜெயக்கொடி காயங்களுக்கு ஆளானதால் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் பின்னர் உறுதிப்படுத்தின. வாகனத்தின் சாரதி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிலாபம், பண்டாரவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
03 மே 1975 இல் பிறந்த நிஷாந்த 1997 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2015 மற்றும் 2020 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.