புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், 2024 பெப்ரவரி 01 முதல் வரி அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.
வரி அடையாள எண் ஒருவரை வருமான வரிக்கு தானாக பொறுப்பாக்காது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான ஆண்டு வரி விலக்கு வரம்பான ரூ.1.2 மில்லியனைத் தாண்டி வருமானம் வரும்போதுதான் இந்தக் கடமை எழுகிறது.
பிப்ரவரி 01 முதல் நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது TINஐச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசாங்கம் மேலும் கூறியது.