யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தப் பேரூந்தில் பயணித்தவர்களில் பலரும், அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களாக இருந்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் அமுலில் உள்ளநிலையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு, இன்று புதன்கிழமை (14) தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து இன்று அதிகாலை கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பேரூந்தில் பயணித்தவர்கள் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதனால், ஈரப்பெரியகுளத்திலிருந்து அப் பேரரூந்து, திருப்பி அனுப்பப்பட்டுள்தாகத் தெரிய வருகிறது.
மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டைகளையும், மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என்றும் அரசு ஏறள்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.