தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன். அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் சம்பந்தனின் தலைமைத்துவம் தலைமை குறித்து திருப்தியடைந்துள்ளன. கூட்டணியில் உள்ள எவருக்கும் கட்சியின் தலைமை குறித்து அதிருப்தியில்லை. கட்சிக்குள் உள்ள அல்லது வெளியிலிருந்து எவராவது பிரச்சினையை உருவாக்க முயல்கின்றார்களா என்ற கேள்விக்கு எவரும் இல்லை.” என்றுள்ளார்.