free website hit counter

தைப் பொங்கலுக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் - ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனோர், காணி விடுவிப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க உரையாற்றினார்.

இந்த நெருக்கடியான விடயங்களைத் தீர்ப்பதற்கு உடனடி கவனம் மற்றும் செயற்திறன் நடவடிக்கைகளின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரச்சினை தொடர முடியாது எனவும், 2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: