சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விவாதத்திற்கான பல்வேறு அழைப்புகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) பொது விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளது.
நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா போன்ற பல SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் NPP இன் பொருளாதார சபை உறுப்பினர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
விவாதங்களுக்கான அழைப்பை NPP ஏற்றுக்கொள்கிறது என்று கூறிய ஹந்துன்நெத்தி, தேசிய அரசியலின் தரத்தை பேணுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் இவ்வாறான விவாதங்களில் ஈடுபடுவது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து, NPP மற்றும் SJB தலைவர்களுக்கு இடையில் விவாதத்தை நடத்துவதற்கு NPP அதிக ஆர்வமாக இருப்பதாக ஹந்துன்நெத்தி கூறினார்.
விவாதத்திற்கு எழுத்துமூல அழைப்பை அனுப்புமாறு எஸ்.ஜே.பிக்கு அழைப்பு விடுத்த ஹந்துன்நெத்தி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தமது கொள்கைகளை தாங்களாகவே பொதுமக்களிடம் முன்வைப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்.
ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் போன்ற சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கீழ் கொள்கை வகுப்பாளர்களாக பணியாற்றி தற்போது SJB யில் செயற்படுவதால் SJB உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவது அர்த்தமற்றது எனவும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.
விவாதத்தை நடாத்துவதற்கு நேரத்தை ஒதுக்கி ஊடக மன்றத்தை தெரிவு செய்வதற்கு NPP தயார் என தெரிவித்த ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், வேறு ஏற்பாடுகள் குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.