free website hit counter

தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்.
தேசிய அடையாள அட்டை (NIC) கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும் என இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்ப்பித்தால் 25 ரூபாயாகவும்,
பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாயாகவும் இருக்கும்.

இதனிடையே, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கு, முன்னதாக 1000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: