2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச ஊடக அறிக்கையின்படி, நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி, இந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு கிலோவுக்கு 25 காசுகள் என்ற சிறப்புப் பொருள் வரிவிதிப்பு, முழு மற்றும் துகள்கள் கொண்ட மைசூர் பருப்புக்கும், மஞ்சள் பருப்புக்கும் பொருந்தும். மேலும், மாலைதீவு மீன்கள் மற்றும் அதன் மாற்றீடுகள் மீது கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.302 என்ற விசேட சரக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
எலும்பு நீக்கப்பட்ட மீன்கள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட மீன்கள் தவிர்த்து, புதிய அல்லது உறைந்த மீன்களுக்கு ஒரு கிலோவிற்கு 10% அல்லது ரூ.400, எது அதிகமோ அது விதிக்கப்படும். (நியூஸ் வயர்)