2028ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கிய ஜனாதிபதி, 2028 ஆம் ஆண்டிலும் தமது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.