free website hit counter

CEB வேலைநிறுத்தம் : CEB ஊழியர்களின் விடுமுறை ரத்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி முன்னர் அறிவித்ததற்கு இணங்க, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மட்டுமே விடுமுறை பெற முடியும்.

இன்று முதல் இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படவிருந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CEBயின் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக CEB ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவிருந்தது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் முன்வைக்கப்பட்ட பிரேரணையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: