உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விபரம்.
இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பூரண தகவல்களைப் பெறுவதற்காக மக்களுக்கு புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2023 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவின் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள இந்த புதிய இணையப்பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் உங்களின் வேட்பாளர்களை அறிந்துகொள்ள கீழே உள்ள இணையப்பக்கம் அல்லது QR இணை பயன்படுத்த முடியும்.