free website hit counter

பிணை முறி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டீஸ்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஊழல் வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்யுமாறு, கொழும்பு நிரந்தர ட்ரயல்-அட்-பார் பெஞ்ச் ஏற்கனவே, இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், அவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதன் மூலம் நீதிமன்றங்களைத் தவிர்த்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula