அனைத்து வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் நாளை (ஜன. 01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த திரு.செனரத் மேலும் குறிப்பிடுகையில், நாளைய தினம் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (VAT) 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த விலை உயர்வுக்கு ஏற்ப தொலைபேசி சந்தையில் 50% கொள்முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, ரூ. 100,000 விலையில் விற்கப்படும் தொலைபேசி நாளை முதல் 135,000 ரூபாய்க்கு விற்கப்படும் என தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.