free website hit counter

டி.பி.எஸ். ஜெயராஜ் மறைந்தார் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் ஊடகத்துறையில் டி.பி.எஸ். ஜெயராஜ் எனும் பெயர் உலகறிந்ததாக இருந்தது. அதற்கு அவரது தனித்துவமான எழுத்துக்களும், எண்ணங்களும் காரணமாக இருந்தன.

இலங்கை அரசியலின் அனைத்துத் தளங்களிலும், பல்வேறு பிரிவுகளுக்கு அப்பாலும், அவர் கவனமும், மரியாதையையும்  பெற்றிருந்தார். 

இலங்கையின்  இனப்பிரச்சினைகள் மற்றும்   அரசியல் நிலைகள் குறித்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக எழுதி வந்த  பத்திரிகையாளரும் பத்தியாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ், 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார். அவருக்கு வயது 71.

இலங்கையில் வீரகேசரி  நாளிதழில்  தொடங்கி, 'தி ஐலண்ட்','தி இந்து' எனத் தொடர்ந்த அவரது பத்தி எழுத்துக்கள், பின்னர் உலகளாவிய பத்திரிகைகளில் வெளிவந்து கவனம் பெற்றன. சிறந்த பன்மொழி ஆளுமையாளராக இருந்த அவரது எழுத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை பலதரப்புக்களிலும் ஏற்படுத்தியிருந்தாலும், எவராலும் தவிர்க்கப்பட முடியாதவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள் !

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: