அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
VAT வரி விலக்குகளை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரால் எழுப்பப்படும் கேள்விகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் திருத்துவதன் மூலம் அரசாங்கம் ரூ.378 பில்லியன் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தினார்.
உள்ளூர் உணவு உற்பத்தியை VAT முறைக்குள் இணைப்பதற்கான தீர்மானம் தொடர்பில் எழுப்பப்பட்ட கவலைகளுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனவரி 1, 2024 முதல் வாட் வரியை 3 சதவீதம் அதிகரித்து 18 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் VAT விலக்குகளை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.