2024 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறந்த பொருளாதார நிலைமைகளை எதிர்பார்க்க முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
2023 Q4 முதல் 2024 வரை வளர்ச்சிப் பாதை தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான சில துறைகளுக்கு அதிக வரி விதிப்பு போன்ற சவால்கள் இருக்கும் என்று CBSL ஆளுநர் எச்சரித்தார்.
2024 ஆம் ஆண்டில் சிறந்த பொருளாதார நிலைமைகளை எதிர்பார்க்க முடியும் என்று கூறிய கலாநிதி வீரசிங்க, இலங்கையில் குறைந்த வட்டி விகிதங்கள், அரசாங்கத்தால் குறைவான கடன்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு வணிகம் செய்வதற்கு அதிக வளங்கள் கிடைக்கும் என்றார்.