இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துள்ளது. அமைச்சர்களாக உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வருமாறு;
சுசில் பிரேமஜயந்த - கல்வி விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம் நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து நளின் பெர்னாண்டோ - வர்த்தகம் ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இவர்களில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசுடன் இணைந்து கொண்டமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.