இலங்கையின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தவிர அமைச்சர்களுக்கான சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் எனவும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் குறிப்பிட்டார்.
அவர் நேற்றைய பாரளுமன்ற உரையின்போது, ராஜபக்ஷர்களை காப்பாற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார். நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன் ஆனால், ராஜபக்ஷ குடும்பத்தைக் காப்பாற்றவே நான் பிரதமர் ஆகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதை அறிவேன்.
2018ல் இலங்கையை நான் விற்றுவிட்டதாக முன்னாள் பிரதமர் மஹிந்த என்மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
தற்போதைய எதிர்க்கட்சியினரும் 2020 ல் அவ்வாறே கூறியிருந்தார்கள். இந்த இரு பக்கங்களிலும் உள்ள எவரையும் பாதுகாக்கப்போவதில்லை. நாட்டைக் காப்பாற்றுவதற்கான சட்டரீதியான நடைமுறையிலேயே செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.