தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டக் களங்களின் மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றுகாலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் இங்கு பேசும் போது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாகவும் தெரிவித்தார். எனவே இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.