free website hit counter

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா - பொது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் - பல இடங்களில் கலவரங்கள் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடப்பு அரசின் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். பிந்திய தகவல்களின்படி முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பிரதமர் மஹிந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியானதும் வீதிகளில் கூடிய மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கோஷமிட்டு மகிழும் கானொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

மற்றொரு புறத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று பேர வாவியில் பொது மக்களால் தள்ளிவிடப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனம் பொதுமக்களால் தாக்கப்பட்டதுடன், அந்த வாகனத்தில் இருந்து மதுபாணப் போத்தல்களும் வீதியில் போடப்பட்டன. குழப்பத்தில் ஈடுபட்ட அரசாங்க ஆதரவாளர்கள் பயணித்த பேரூந்து ஒன்றும் பொதுமக்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கவிழ்க்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை காலிமுகத்திடலில் நடந்த கலவரங்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 140ஐ எட்டியுள்ளதாகவும், இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula