free website hit counter

இலங்கை ஜனாதிபதி செயலகம் நோக்கி பல்கலைக்கழக மாணவர் பேரணி !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்ப் பேரணியொன்று நடைபெறுகின்றது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கு கொள்வோர், இன்று முதல் நாளை காலை 9 மணி வரை கோட்டை ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி மற்றும் வங்கி மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலை சென்றடையவுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை போடப்பட்டுள்ளது. இந்த வீதித்தடைகளுள் மறைக்கப்பட்ட இரும்பு முள்வேலிகளும் உள்ளதாகவும் செய்திக்ள் வெளியாகியுள்ளன. பெருமளவிலான காவல்துறையினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதித்தடைகள் காரணமாக பணிகள் மற்றும் இப் பாதைகளில் பயணிப்போர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: