இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவுற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்கள் அதன் பெறுமதி நிலையாகவிருந்தது.
இந் நிலையில் இன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 319.99 ரூபாவாகவும், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நந்தலால் வீரசிங்க, 2022 ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை நாளை வௌியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.