இலங்கைப் பாராளுமன்றத்தினுள்ளே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், சபாநாயகர் சபையை ஒத்திவைத்து, சுமூகநிலையைத் தோற்றுவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேசுகையில், இக்கட்டான நிலையில் நாட்டினைக் காப்பாற்ற எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது. ஆதலால் 6 மாதங்களுக்கு, பொருளாதார நிபுணரான ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுப்பது மாற்று நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.