இலங்கைத் தலைநகர் கொழும்பில், அதிக வீதப் பணப்பரிவர்த்தனை செய்த தனியார் நாணய மாற்று நிலையங்கள் சிலவற்றின் அனுமதியை இலங்கை மத்திய வங்கி ரத்துச் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை கருத்தில் கொண்டு, மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களம் மார்ச் 30 அன்று மேற்கொண்ட விசாரணையின்படி, அதிக மாற்று விகிதங்களை வழங்கியது மற்றும் அதன் மூலம் உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வெளிநாட்டு நாணயத்தை அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்க முயற்சித்தது, என்பன FEA இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பணம் மாற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை மீறுதல் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.