சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் நெய்மாரை 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.
இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது. அவரை விற்க பி.எஸ்.ஜி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் அணியில் இணைய நெய்மார் சம்மதம் தெரிவித்துள்ளார். அல் ஹிலால் கழகத்தில் விளையாடுவதற்காக அவருக்கு வருடாந்தம் 150 மில்லியன் யூரோ வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.