free website hit counter

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கியமைக்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியமைக்காக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 33 ஆயிரத்து 609 ரேஷன் கடைகளில் பணிபுரியும் 20 ஆயிரத்து 712 பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்து 750 மட்டும் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத்தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வரவு வைக்க பதிவாளர், அலுவலக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை, மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் சேரவேண்டிய தொகையினை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வைக்கப்படும். பின்னர் முறைப்படி ரேஷன் கடை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula