free website hit counter

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த மாதம் செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்று, 19 நாட்கள் நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த மாதம் 30--ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. அன்றைய தினம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

பின்னர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரியில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கககள் ஆந்திராவில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. அதாவது கர்நாடக மாநில எல்லையில் உள்ள ராய்ச்சூரில் நேற்று பாதயாத்திரை நடத்தினார்.

இன்றும் ராய்ச்சூர் மாவட்டம் யரகேலா கிராமத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

பின்னர் சிறிது நேரத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும், ராகுல்காந்தி பாதயாத்திரையில் இணைந்தார். காலை 6 மணியில் இருந்து காலை 10மணிவரை ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் 10 மணியளவில் ராய்ச்சூரில் உள்ள ஓட்டலில் அவர் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தார். அதன்பிறகு, மாலை 4 மணிக்கு பாதயாத்திரை மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

இந்த நிலையில், யரகேராவில் பாதயாத்திரை தொடங்கிய சிறிது நேரத்தில் ராகுல்காந்தியுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சீருடை அணிந்து கொண்டு இந்த பாதயாத்திரைக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தார்கள். பின்னர் தேசிய கொடியை பிடித்து கொண்டு ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ராகுல்காந்தியும் சிறிது தூரம் ஓடினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: