இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பெருமளவிலான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.
தொற்றுநோயின் மூன்றாவது அலையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தொடர் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இரண்டாவது கொரோனா அலையின் உச்சகட்டத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் அதிகரிப்பது மற்றும் கிடைப்பது குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை உயர்மட்டக் கூட்டம் ஒன்றினைக் கூட்டியுள்ளார் என அறியவருகிறது.