காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை தனியாருக்கு விற்றதில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்பி பெருமையுடன் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
"அரசு சொத்துக்களை குறைவான தொகையை பெற்று கொண்டு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும், விற்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்காக இதை செய்கிறார்கள்.
தனியார் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்க லைசன்ஸ் கொடுக்கலாம். அதைவிடுத்து மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கியதை கொடுக்கலாமா? லாபத்தில் இயங்கும் எல்ஐசியை ஏன் தனியாருக்கு கொடுக்கணும்?
இச்செயலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தது கிடையாது. நஷ்டத்தில் இயங்கி நிறுவனங்கள் தான் தனியாருக்கு கொடுக்கப்பட்டன" என்று கூறினார்.