இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நேற்றுத் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடர், இன்று 2 வது நாளாக கூடிய வேளை, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதனால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் அந்த அவையும் பிற்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்கட் சிகள், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் ஆர்பாட்டம் செய்து அமளியில் ஈடுபட்ட நேற்று நாள் முழுவதும் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளின் தொடக்கத்திலேயே மக்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை, பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைப்பதாக அறிவித்தார்.