free website hit counter

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய உடல்நிலை 

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங், கடந்த புதன் கிழமை அன்று, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நிதிஷ் நாயக் கூறுகையில், மன்மோகன் சிங் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: