மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன் போது பிரதமர் மோடி விவசாயிகளின் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். அதில் வேளான் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையே தரும். எனினும் மூன்று வேளான் சட்டங்களை திரும்ப முடிவு செய்திருப்பதாக தனது உரையின் போது அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் தனது உரையை முடித்தபின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக உத்தரப் பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார்.
அங்கு முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, 'ராஷ்டிர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' இன் இறுதி நாளில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இராணுவ சாதனங்களை இந்திய ஆயுதப் படைகளிடம் ஒப்படைக்க ஜான்சிக்கு புறப்படுகிறார். என்று அவரது அலுவலகம் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.