டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இற்கான சேவைகள் வருகின்ற ஜூலை 22 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மே மாதம் முதல் டெல்லி விமான நிலையம் அதன் 2ஆம் முனையத்தின் சேவை நடவடிக்கைகளை நிறுத்தியது. எனினும் விமான சேவைகள் 3ஆம் முனைத்திற்கு மாற்றப்பட்டு மட்டுமடுத்தப்பட்ட சேவையாக இயங்கிவந்தன.
இந்நிலையில் வருகின்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் 2ஆம் முனையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதில் ஒரு நாளைக்கு சுமார் 200 விமான இயக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதிக்குள் 280 வரை இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் டெல்லி விமான நிலையம்; மும்பை, பாட்னா, பெங்களூரு, புனே, ஹைதராபாத், லே, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற 10 இடங்களைச்சேர்ந்த வருகையாளர்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல மாநிலங்கள் விதித்த ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்தில் கணிசமான வீழ்ச்சிக்குப் பின்னர், டெல்லி விமான நிலையம் பயணிகளின் எண்ணிக்கையில் மெதுவாக வளர்ச்சியைக் காணத் தொடங்கியதாகவும், ஆனால் விதிமுறைகளில் தளர்வுக்கு இடமளிப்பதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூற்றுப்படி, டெல்லி விமான நிலையம் 2021 மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 18,000 ஆக இருந்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
இதேபோல், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 4,500 லிருந்து ஜூன் இறுதியில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7,500 ஆக உயர்ந்துள்ளது.