free website hit counter

பொங்கல் பண்டிகை விடுமுறையில் மெட்ரோ ரெயிலில் 8 லட்சம் பேர் பயணம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும், திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர்.

14 ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15 ஆம் தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 160 பேரும், 16 ஆம் தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 17 ஆம் தேதி காணும் பொங்கலில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 399 பயணிகளும் என 4 நாட்களில் மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: