இந்தியாவில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதிலே முதல் இடத்தில் மாராட்டியமும், இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மமூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறியவருகிறது.
மாராட்டியத்தில், நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் குறைந்தது 100,233 பேர் மாநிலத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இறப்புகளில் அதியமானவை இரண்டாவது அலையின் போது நிகழ்ந்தவை. இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 30 ஆயிரத்து 531 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தவரிசையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் 25,665, இழப்புக்களையும், அடுத்து டெல்லி 24,447, உத்தரபிரதேசம், 20,895, மேற்கு வங்காளம் 15,921, பஞ்சாப் 14, 840, சத்தீஸ்கார் 13,139, ஆந்திரா 11,213, குஜராத் 9,890 இறப்புகளை சந்தித்து உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இன்றுவரை 3.4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 30 சதவீதமான இழப்புக்கள் மராட்டியத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.