கொரோனா தொற்றுபரவல் வேகத்தில் இந்தியாவில் 3ஆம் இடத்தில் இருந்துவரும் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2ஆம் அலை கொரோனா தாக்கத்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் சற்று குறைந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2 வாரங்களுக்கு முன் கொரோனா பரவலின் வேகம் தமிழகத்தில் கடுமையாக இருந்தமையால் நாளொன்றில் தொற்று ஏற்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது. இதனையடுத்து மே 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பரவலின் வேகம் குறையத்தொடங்கினாலும் தமிழக முதல் அமைச்சர் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, மே 31-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.
கொரோனா பரவலின் வேகத்தை மேலும் குறைப்பதற்கும் ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றது, இதன் போது நாளை ஜூன் 07ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.