free website hit counter

இலண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியது !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவின் மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து  220  பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேருடன் இலண்டனுக்குப்  புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.  

இன்று  வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ள விமான நிறுவனம் மற்றும் காவல்துறை அதிகாரிகள்,  இதில் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் குறித்துத் தெரிவிக்கவில்லை.

இங்கிலாந்தின் லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட விமானம்,  விமான நிலையத்திற்கு அருகிலுள்ள  பொதுமக்கள் பகுதியில்  விபத்துக்குள்ளானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்திற்கு அருகில் வானத்தில் அடர்த்தியான கரும்புகை எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குஜராத் மாநில காவல்துறை  மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாகத் தெரிவித்துள்ளதுடன், தேசியப் பேரிடர் மீட்புக்குழு,  மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதையும் உறதி செய்துள்ளது. இதுவரையில் 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: