உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே மேல்நிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் 23ம் திகதி முதல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே போல, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.