free website hit counter

காகிதங்கள் இனி வேண்டாம் - முதலமைச்சர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாகக் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில்,

இதற்காக தமிழ்நாடு சட்டசபையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைச் சபாநாயகர், துணைச் சபாநாயகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதன்முறையாக வரும் ஆகஸ்ட் 13ஆம் திகதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. அதேபோல தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் அதற்கு மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு பட்ஜெட்டும் முதன்முறையாக இ-பட்ஜெட் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் சட்டசபையில் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர் மேசை முன்பும் தனித்தனியாகக் கணனி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல படிப்படியாகச் சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளிலும் காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தமிழ்நாடு சட்டசபை தயாராகி வரும் நிலையில், இந்த பணிகளைச் சபாநாயகர் அப்பாவு துணைச் சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula