உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.
ரஷ்யா வெள்ளியன்று முக்கிய நோக்கமான டான்பாஸின் "விடுதலை" மீது முயற்சிகளை மையப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்ததை அடுத்து உக்ரைனின் "நடுநிலைமை" பற்றிய கேள்வி "முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய ஊடகங்களுக்கு தெரிவித்தார். மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாஸ்கோவால் கோரப்பட்ட மையப் புள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ளன. துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் இஸ்தான்புல்லில் மார்ச் 29 மற்றும் 30 க்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.