விவசாயம் சார்ந்த செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை சுவிஸ் நாடு முன்னெடுத்துள்ளது. இது செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது.
விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸ்ட்சர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முழுவதுமாக தடை செய்யவுள்ளனர். இதன் தொடர்பாக மக்களிடையே பொது வாக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது.
இத் தடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்களை நிறுத்தும் முயற்சியாக இந்த தடை அமையும் எனவும் இந்த திட்டங்கள் மருந்துகள் சார்ந்த பலரது வணிகங்கள் பாதிக்கப்படும் என்று சுவிஸ் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து ஜனநாயக ஆட்சிமுறை என்பதால் ஆல்பைன் தேசத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்குப் பெட்டியில் எடுக்கப்படுகின்றன. மேலும் நாடு தழுவிய வாக்குகளை உறுதி செய்வதற்காக பிரச்சாரக்காரர்கள் 100,000 கையொப்பங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது,
உலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தியாளரின் வீடாக சுவிட்சர்லாந்து இருந்துவருவது குறிப்பிடதக்கது.