இத்தாலிய அரசாங்கத்தின் டிஜிட்டல் சுகாதாரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான "சான்றிதழ் வெர்டே" அல்லது "கீறீன் பாஸ்" வலைத்தளம் இன்று வியாழக்கிழமை மக்கள் பாவனைக்கு வந்துள்ளது.
ஆன்லைனில் டிஜிட்டல் சான்றிதழைப் பெற விரும்புவோர், www.dgc.gov.it எனும் இணைய முகவரியில் சென்று தங்களுக்கான விண்ணபங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஜூலை 1ம் திகதி, "கிரீன் பாஸ்" திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குள்ள நிலையில், கோவிட் -19 இலிருந்து தடுப்பூசி, சோதனை அல்லது மீட்கப்பட்டதாகக் காட்டும் டிஜிட்டல் சான்றிதழை இத்தாலி மக்கள் இப்போது இணையத்தில் முயற்சிக்கலாம்.
.
இந்தத் திட்டத்தினை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பிரதமர் மரியோ டிராகி அதற்கான அரச ஆணையிலும் கையெழுத்திட்டார். இந்தப் புதிய சான்றிதழ்கள் இலவசம், மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீட்டைக் கொண்டுள்ளதுடன், இத்தாலிய மற்றும் ஆங்கிலம், பிரஞ்சு அல்லது ஜெர்மன் மொழிகளிலும் கிடைக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.